கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Thursday, May 27, 2021

நூல் என்பதன் பெயர்க்காரணம் நன்னூல் பாடலும் விளக்கமும் NOOL PEYAR KARANAM NANNOOL SONG

 பஞ்சிதன் சொல்லாப் பனுவல் இழையாகச்

செஞ்சொற் புலவனே சேயிழையா- எஞ்சாத

கையே வாயாகக் கதிரே மதியாக

மையிலா நூல்முடியு மாறு.

- நன்னூல் (24)


நூல் நூற்கும் பெண் பஞ்சால் தன் கைகளைக்கொண்டு கதிரால் நூல் நூற்கிறாள். அதுபோலப் புலவன் சொற்களால் தன் வாயைக்கொண்டு அறிவால் நூல் நூற்க குற்றமற்ற நூல் உருவாகிறது.

சொற்கள் பஞ்சாகவும், புலவன் நூல் நூற்கும் பெண்ணாகவும், புலவனின் வாய் அப்பெண்ணின் கையாகவும் , புலவனின் அறிவு நூல் நூற்கும் கருவியான இங்குக் கதிராகவும் கருதப்படுகிறது.

பஞ்சு நூலாக மாறுவது போல சொற்கள் நூலாக நூற்கப்படுவதால் நூல் என்னும் பெயர் அமைந்தது என்று நன்னூல் விளக்குகிறது.

தமிழ்த்துகள்

Blog Archive