கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, May 24, 2021

கால்முளைத்த கதைகள் நூல் குறித்த நண்பனுக்குக் கடிதம்

 

கால்முளைத்த கதைகள் நூல் குறித்து நண்பனுக்குக் கடிதம்

    1/280, வடக்குத் தெரு,

கல்லூரணி - 626118

     03-02-21.

அன்பிற்கினிய நண்பா,               WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

    இங்கு அனைவரும் நலம். அதுபோல் அங்கு உங்கள் அனைவரின் நலம் காண ஆவலாய் உள்ளேன். புதிய காலை புலரும் வேளை நீயும் நானும் குதித்தோடிய வயல்வெளிகள், மரக்கிளையில் தாவும் மந்திகளாய்க் காலம் கழித்த அந்நாள்கள் பசுமையானவை. நீந்திக் கடந்த கண்மாய்களும், மிதிவண்டி ஓட்டிப் பழகிய ஒற்றையடிப் பாதைகளும் நம் வருகையின்றி வறண்டுகிடக்கின்றன. என் பிறந்தநாளுக்கு உன் பரிசு கண்டு மகிழ்ந்தேன்.   WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

நீ எனக்கு அனுப்பிய எஸ்.இராமகிருஷ்ணனின் கால்முளைத்த கதைகள் படித்தேன். உண்மையில் அது ஒரு கலைப்பெட்டகம். உலகெங்குமுள்ள பழங்குடி மக்களிடம் சொல்லப்பட்டுவருகின்ற நாட்டுப்புறக்கதைகளின் தொகுப்பு அது. பூமியில் மனிதர்கள் தோன்றிய கதை முதல் காகம் ஏன் கறுப்பாக உள்ளது என்பது வரை அத்தனையும் வியப்பு, இந்தக் கதைகளைச் சொன்ன மனிதர்கள் குகைகளில் வசித்தார்கள். இருட்டைக் கண்டு பயந்துபோய் அதை ஒரு கதையாக்கினார்கள். பலநூறு ஆண்டுகள் கழிந்துவிட்டபோதும் இக்கதைகள் கூழாங்கற்களாய்ப் பதிந்து கிடந்து பார்ப்பவரைச் சுண்டி இழுக்கின்றன. நம் போன்ற இளம் வாசிப்பாளர்களுக்காகப் படைக்கப்பட்ட புத்தகம் இது. அதைத் தேர்ந்தெடுத்து அனுப்பிய உனக்கு என் மனமார்ந்த நன்றி.  

WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

அதிலும் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்கள் எம் மண்ணின் மைந்தர். எங்கள் விருதுநகர் மாவட்டத்தில் உள்ள மல்லாங்கிணர் என்ற ஊரில் பிறந்தவர். சஞ்சாரம் என்ற இவரின் படைப்புக்கு 2018 இல் சாகித்ய அகாதெமி விருது வழங்கப்பட்டது.  தற்காலத் தமிழ்ப் படைப்புலக எழுத்தாளரான எஸ்.இராமகிருஷ்ணனின் படைப்புகளைப் படிக்க எனக்கு மேலும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டதற்கு நன்றியை உரித்தாக்குகிறேன்.   

எதிர்வரும் விடுமுறைக்கு நீ கட்டாயம் ஊருக்கு வர வேண்டும். புயலுக்குத் தலைவணங்கும் நாணலாய் வாழ்க்கை கடந்து போகிறது. மீண்டும் வரும் என்ற கரையின் தவிப்பைக் கடலலைகள் உணருமா என்று தெரியவில்லை. நம் நண்பர்களிடமும் நீ அனுப்பிய புத்தகத்தை வாசித்துக் காட்டி மகிழ்ந்தேன். முழு ஆண்டுத் தேர்வை நல்ல முறையில் எழுது. என் பிறந்த நாளுக்கு உயிரோட்டமான ஒரு புத்தகத்தைப் பரிசளித்தமைக்கு மீண்டும் என் நெஞ்சார்ந்த நன்றி. மற்றவை நேரில்.              WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

இப்படிக்கு,

           உன் அன்பு நண்பன்,

WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM                    மு.முத்துமுருகன்.

உறைமேலிட்ட முகவரி           

    செ.பாலமுருகன்,

     3, முகில் நகர்,

     அருப்புக்கோட்டை-626101.

      விருதுநகர் மாவட்டம்.

தமிழ்த்துகள்

Blog Archive