குடியரசு நாள் விழா
முன்னுரை
இந்தியக் குடியரசு நாள் என்பது இந்திய ஆட்சிமைக்கான ஆவணமாக இந்திய அரசு சட்டம் 1935 இன்
மாற்றாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் செயலாக்கத்திற்கு
வந்த நாளாகும். அம்பேத்கர்
தலைமையில் இந்திய அரசியல் சட்டம்
நிறைவேற்றப்பட்டு, 1950 சனவரி 26 முதல் குடியரசு நாளாகக் கொண்டாடப்படுகிறது
இந்தியாவின் முக்கிய தேசிய விழாக்களில் இதுவும் ஒன்று.
குடியரசு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
குடியரசு என்பதன் பொருள் “மக்களாட்சி” ஆகும். தேர்தல் மூலம் மக்கள் விரும்பிய
ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் முறை குடியாட்சி எனப்படுகிறது.
“மக்களுக்காக, மக்களால்
மக்களே தேர்ந்தெடுக்கும் அரசு” என மிகச்சரியாக குடியரசு என்ற வார்த்தைக்கு
இலக்கணம் வகுத்துத் தந்தவர், ஆபிரகாம் லிங்கன்.
கொண்டாடும் முறை
இந்தியாவின் முதல் பிரதமர் நேரு அவர்கள், இந்திய மூவண்ணக் கொடியை ஏற்றி, குடியரசு நாள்
கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்தார். அன்று முதல் சனவரி 26 ஆம்
நாள் தம்முடைய தாய் திருநாட்டைக் காக்க தம் இன்னுயிரையும் நீத்த தியாகிகளை
நினைக்கும் வகையில் நாடெங்கும் அனைத்து பள்ளிகளிலும், கல்லூரிகளிலும்,
அலுவலகங்களிலும் தேசிய கீதம் பாடி கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டு வருகிறது.
விழாவின் சிறப்பு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
ஆண்டுதோறும் குடியரசு நாளன்று சிறந்த சேவை
புரிந்தோருக்கும், வீரதீர சாகசம் புரிந்தவர்களுக்கும் விருதுகள், பாராட்டுகள்,
பதக்கங்கள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. அன்றைய நாள் புது தில்லியில்
குடியரசுத்தலைவர்
முன்னிலையில் முப்படைகளின் அணிவகுப்பும், அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாநிலங்களின் சார்பிலும் அவர்களின் சாதனை அலங்கார ஊர்தி
அணிவகுப்பும் நடைபெறும்.
மாநிலத்தில் விழா
மாநிலங்களில் மாநில ஆளுநர் கொடியேற்றுவதுடன் காவலர் அணிவகுப்பையும், அரசுத்துறை மிதவைகளையும்,
பண்பாட்டு நிகழ்ச்சிகளையும் பார்வையிடுகிறார். சிறந்த காவலர்களுக்கு
விருதுகள் வழங்கப்படுகின்றன.
முடிவுரை WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
அதிக மக்கள்
தொகையைக் கொண்ட நாடாக இருந்தாலும், சாதி,
மதம், மொழி எனப் பல வேறுபாடுகள் இருந்தாலும்
அனைவரும் இந்தியர் என்பதில் பெருமைகொள்ளுவோம். சுதந்திரக் காற்றைச் சுகமாய்
சுவாசிப்போம். வாழ்க பாரதம்
செ.பாலமுருகன், தமிழாசிரியர், அருப்புக்கோட்டை.