கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, May 24, 2021

அப்துல் கலாம் தமிழ்க்கட்டுரை APJ ABDUL KALAM TAMIL KATTURAI

அப்துல் கலாம்

முன்னுரை

அறிவியல் மீது அன்பு வைத்து, மணவாழ்வை மறந்து மக்களுக்காக வாழ்ந்த உத்தமத் தமிழராம், தமிழகத்தில் பிறந்து இந்தியாவின் குடியரசுத் தலைவராகப் பதவி ஏற்று உலக அளவில் புகழ் பெற்ற ஏவுகணை நாயகராம்,  அறிமுகம் அவசியமில்லாத மேதகு. அப்துல் கலாம் அவர்கள் குறித்து இக்கட்டுரையில் காண்போம்.

பிறப்பும் கல்வியும்   WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

அப்துல் கலாம் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 15 ஆம் நாளில், இராமேசுவரத்தில் ஜெயினுலாப்தீன் - சியம்மா இணையருக்கு மகனாகப் பிறந்தார். அவரின் முழுப்பெயர் ஆவுல் பக்கீர் ஜெயினுலாப்தீன் அப்துல் கலாம். இராமேசுவரம் தொடக்கப் பள்ளியில் தனது பள்ளிக் கல்வியை முடித்தார். பின்னர் திருச்சிராப்பள்ளியில் உள்ள தூய வளன் கல்லூரியில் 1954 ஆம் ஆண்டு இயற்பியலில் பட்டம் பெற்றார். பின்னர் எம்.ஐ.டி சென்னையில், விண்வெளி பொறியியல் முதுகலைப் பட்டமும் பெற்றார்.

ஆராய்ச்சிப்பணி       WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

கலாம் இந்திய இராணுவத்துக்காக ஒரு சிறிய ஹெலிகாப்டரை வடிவமைத்துக் கொடுத்து பணியைத் தொடங்கினார். புகழ்பெற்ற விண்வெளி அறிவியலாளர் விக்ரம் சாராபாயின் கீழ் இயங்கி வந்த ஒரு குழுவின் (INCOSPAR) அங்கமாகவும் கலாம் இருந்தார். 1969 ஆம் ஆண்டில், கலாம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்திற்கு மாற்றப்பட்டு அங்கு இந்தியாவின் முதல் உள்நாட்டு செயற்கைக்கோள் பாய்ச்சுதல் வாகனத்  (எஸ். எல். வி-III) திட்டத்தின் இயக்குர் ஆனார். (எஸ். எல். வி-III) பாய்ச்சுதல் வாகனம் ரோகினி செயற்கைக்கோளை புவிச்சுற்றின் அருகே வெற்றிகரமாக 1980 ல் ஏவியது.         WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

அணு ஆயுத சாதனை WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

1974 ஆம் ஆண்டில் நடந்த முதல் அணு ஆயுத சோதனைக்குப் பிறகு 1998 ஆம் ஆண்டில் நடந்த போக்ரான் - II அணு ஆயுத பரிசோதனையில் நிறுவன, தொழில்நுட்ப ரீதியாக கலாம் முக்கியப் பங்காற்றினார்.

பிற பணிகள்     WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

ஜூலை 1992 முதல் டிசம்பர் 1999 வரை அவர் பிரதமரின் தலைமை அறிவியல் ஆலோசகராகவும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் செயலாளராகவும் இருந்தார்.

குடியரசுத் தலைவர்   WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

அப்துல் கலாம் இந்தியாவின் பதினொன்றாவது குடியரசுத் தலைவராக 25 - 07 - 2002 முதல் 25 – 07 - 2007 வரை பணியாற்றினார். குடியரசுத் தலைவர் ஆவதற்கு முன் பாரத ரத்னா விருது பெற்ற மூன்றாவது நபர் கலாம் ஆவார். அவர் குடியரசுத் தலைவராகப் பொறுப்பு வகித்த முதல் விஞ்ஞானி மற்றும் மணமாகாதவர் ஆவார்.

சிறப்பு             WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

ஐக்கிய நாடுகள் அவையில் அப்துல் கலாமின் 79 ஆவது பிறந்த நாள் உலக மாணவர் தினமாக அறிவிக்கப்பட்டது. அவர் 40 பல்கலைக்கழகங்கள் வழங்கிய மதிப்புறு முனைவர் பட்டங்களைப் பெற்றுள்ளார்.

கலாம் எழுதிய புத்தகங்கள்    WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

அக்னிச் சிறகுகள், இந்தியா 2020, வெளிச்சத் தீப்பொறிகள், திட்டம் இந்தியா, ஊக்கப்படுத்தும் யோசனைகள் போன்ற புத்தகங்கள் கலாம் எழுதியவை. கலாம் அவர்களின் பொன்மொழிகள் பல மக்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்றுள்ளன.

WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

விருதுகள்    WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

1997 ஆம் ஆண்டு பாரத ரத்னா விருதும், 1990 ஆம் ஆண்டு பத்ம விபூஷன் விருதும், 1981 ஆம் ஆண்டு த்ம பூஷன் விருதும் பெற்றார். மேலும் பல விருதுகள் கலாம் கரங்களில் தவழ்ந்து தங்களைப் பெருமைப்படுத்திக் கொண்டன.

மறைவு      WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

27 – 07 – 2015 அன்று இந்தியாவின் மேகாலயா மாநிலத்தலைநகரான சில்லாங்கில் மாணவர்களிடையே உரையாற்றுகையில் மயங்கி விழுந்து மறைந்தார். நம் நினைவில் நிறைந்தார்.

அரசு அறிவிப்புகள்    WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

     அப்துல் கலாமின் பிறந்த நாளான அக்டோபர் 15 தமிழ்நாட்டில் இளைஞர் எழுச்சி நாளாகக் கொண்டாடப்படும் என தமிழக அரசு அறிவித்தது. பாட்னாவில் உள்ள வேளாண் கல்லுாரிக்கும் அறிவியல் நகரத்துக்கும் அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று பீகார் அரசு அறிவித்தது. அப்துல் கலாம் பிறந்த அக்டோபர் 15 ஆம் நாள் வாசிப்பு நாளாகக் கொண்டாடப்படும் என்று மகாராட்டி அரசு அறிவித்தது. தொழில் நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு அப்துல் கலாம் பெயர் சூட்டப்படும் என்று உத்தரபிரதேச அரசு அறிவித்தது. புதுதில்லியில் உள்ள அவுரங்சீப் சாலைக்கு அப்துல் கலாம் சாலை எனப் பெயரிட்டு புதுதில்லி மாநகராட்சி ஆணையிட்டது.

முடிவுரை         WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

கனவு காணுங்கள் என்ற கலாமின் வரிகளைச் சுமந்து, வல்லரசு என்ற இலக்கை நோக்கிப் பயணிப்போம். கலாமின் கனவை நனவாக்க மாணவச்செல்வங்களும் இளைஞர்களும் உறுதி ஏற்போம். இளைஞர் எழுச்சி நாளில் எழுச்சி பொங்கட்டும்.

கலாம் பெருமை காப்போம். கனவை நனவாக்குவோம்.

தமிழ்த்துகள்

Blog Archive