கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, May 24, 2021

ஒற்றுமையே உயர்வு தமிழ்க் கட்டுரை OTRUMAIYE UYARVU TAMIL KATTURAI

 

ஒற்றுமையே உயர்வு

முன்னுரை             WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

முப்பது கோடி முகமுடையாள் – உயிர்

மொய்ம்புற வொன்றுடையாள் என்றார் பாரதியார். இன்று இந்தியத் தாய் 110 கோடி முகமுடையாள் ஆகிவிட்டாள். சாதி, மதம், இனம், மொழிகளால் வேறுபட்டிருந்தாலும் இந்தியர் என்ற உணர்வால் ஒன்றுபட்டிருக்கிறோம்.

ஒற்றுமையின் வலிமை WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

பிரித்தாளும் சூழ்ச்சியால் ஆங்கிலேயர் நம்மைப் பிளவு படுத்தினர். அடிமை விலங்கை அறுத்தெறிய ஒன்றுபட்டோம் வென்றுவிட்டோம். விடுதலை பெற்ற பின்னும் நடைபெற்ற போர்களில் ஒற்றுமையால் வெற்றி பெற்றோம். நம் வலிமையை நாமே உணர்ந்தோம்.

விண்ணைத் தொடும் சாதனைகள்       WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

வளர்ந்து வரும் நாடுகளில் சிறந்த நாடு நம் நாடு. மிகப்பெரிய குடியரசு நாடு நமது. தொழில் துறை, வேளாண் துறை, பொறியியல், மருத்துவம், கணினி, தகவல் தொழில்நுட்பம் என எல்லாவற்றிலும் நாம் இன்று சாதனைகள் பல படைத்துள்ளோம். தேசிய விளையாட்டான ஹாக்கியில் ஒலிம்பிக்கில் தங்கம் வென்றோம். நம் செயற்கைக்கோள்களை நாமே ஏவும் தொழில்நுட்பம் பெற்றிருக்கிறோம். நிலவுக்குச் சந்திராயன், செவ்வாய்க்கு மங்கள்யான் அனுப்பி நாம் எவருக்கும் சளைத்தவர்கள் அல்ல என நிரூபித்து இருக்கிறோம்.

வேற்றுமையில் ஒற்றுமை                    WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

இந்தியர்களுக்கு ஆளத் தெரியாது, எனவே அவர்களுக்கு விடுதலை தரவில்லை என்றார் முன்னாள் இங்கிலாந்து பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில். நமக்கென சட்டம் வகுத்து வேற்றுமையுள் ஒற்றுமையுடன் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறோம். மூவண்ணக் கொடியின் சக்கரம் நீதியை நிலைநாட்டி பட்டொளி வீசிப் பறக்கிறது.

முடிவுரை                          WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

ஐநாவின் பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பினர் பதவி நம்மைத் தேடி வர இருக்கிறது. ஆசிய நாடுகளின் வலிமையுள்ள தலைமையாக நம் பாரதம் விளங்குகிறது. ஒன்று பட்டால் உண்டு வாழ்வு நம்மில் ஒற்றுமை நீங்கில் அனைவருக்கும் தாழ்வு என்ற ஔவைப் பிராட்டியின் வரிகளை நாம் உணர்ந்து விட்டோம். ஆம்,

பாரத பூமி பழம்பெரும் பூமி. நீரதன் புதல்வர் இந்நினைவகற்றாதீர்.

WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

தமிழ்த்துகள்

Blog Archive