அறம் செய விரும்பு
முன்னுரை
அறம், பொருள், இன்பம், வீடு என்று வாழ்ந்தவர்கள் நம் முன்னோர். வாரிக்கொடுத்த
வள்ளல்கள் பலர் வாழ்ந்த புண்ணிய பூமி இது. அன்பும் அறனும் தான் வாழ்க்கையின்
பண்பும் பயனும் என்றார் வள்ளுவர். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு அல்லவா ?
கடையேழு வள்ளல்கள்
முதல் ஏழு, இடை ஏழு, கடை ஏழு
வள்ளல்களைக் கொண்டது நம் தமிழகம். வேள்பாரி,
ஆய்அண்டிரன், எழினி, கோப்பெருநள்ளி, மலையமான் திருமுடிக்காரி, பேகன், வல்வில் ஓரி என்ற வள்ளல்கள் கடையேழு
வள்ளல்கள் ஆவர். இவர்களில் முல்லைக் கொடிக்குத் தேர் தந்த பாரியும்,
மயிலுக்குப் போர்வை தந்த பேகனும் மிகச்சிறந்தவர்கள்.
இல்லார்க்கு ஒன்று ஈவது அறம்
கேட்டுக் கொடுப்பது யாசகம், கேட்காமல் கொடுப்பது உதவி, உதவி பெறுபவருக்கே
கொடுப்பவர் யாரென்ற விளம்பரம் இன்றிக் கொடுப்பதே அறம். அறம் செய விரும்பு என்றார்
ஔவைப்பாட்டி. ஆம், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்.
முடிவுரை
அறத்தான் வருவதே இன்பம்
மற்றெல்லாம்
புறத்த புகழும் இல என்கிறார் வள்ளுவர்.
அறச்செயல்களைச் செய்வதால் கிடைப்பதுதான் இன்பம். மற்றவற்றால் கிடைப்பது இன்பமும்
இல்லை புகழும் இல்லை. அறம் செய்வோம் ! வாழ்க்கையை அழகாக்குவோம் !