எனது பயணம்
முன்னுரை WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
இந்த உலகம் எழில்மிக்கது. அதனைக் காணும் கண்கள்
கொடுத்துவைத்தவை. காட்சிகள் கற்பனையாய் விரிய கதை
பிறக்கும். கவிதை துளிர்க்கும்.
ஏட்டில் எழுதமுடியா வரிகளை வண்ணங்களால் தீட்ட ஓவியம்
உருவாகும். இதோ என் பொதிகை மலைப் பயணத்தை
அவ்வாறே பதிய முற்படுகிறேன்.
தொடர்வண்டிப் பயணம்
சாளரங்கள் கனவுலகின் திறவுகோல்கள்.
ஆம், காட்சிகளைக் கண்ணுக்குள் விரியவைப்பவை அவைதானே ?
விருதுபட்டியில் செங்கோட்டை விரைவு வண்டியைப் பிடித்தேன். சாளரத்து இருக்கை,
இனிதான தென்றல் தாலாட்டியபடி என் தொடர்வண்டிப் பயணம் தொடர்ந்தது.
பொதிகை மலையில் தவழும் மேகங்கள் WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
இராசபாளையத்தைத் தொட்டதும் தென்றல்
என்னைத் தொட்டது. பசுமை போர்த்திய மலைகள், கத்தரிக்கப்பட்ட
பூங்காப் பொம்மைகளெனத் தெரிந்தன. சூல்கொண்ட மேகங்கள் மலைமுகட்டில்
காலூன்றப் பார்த்தன.
விண்ணாறு பாய்ந்தது WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
தென்காசிச் சாரலில் நனைந்தபடி குற்றாலம்
சென்றடைந்தோம் பேருந்தில். வெள்ளியை உருக்கிவிட்டதென
துள்ளிப் பாய்ந்தது அருவி தூரத்துப்பார்வைக்கு.
கிட்டப்போய்ப் பார்த்தால் விண்ணாறு பொங்கி வழிந்து
வீழ்ந்தது. தேனருவி திரையெழும்பி வானின் வழியொழுகும் என்ற திரிகூடராசப்பக்கவிராயரின் வரிகள்
நினைவிலாடின. முக்குளித்தோம் மூச்சடக்கி, மூலிகை மணம் நுகர்ந்தோம்.
ஐந்தருவி எனும் அமுதூற்று WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
மலைமகளின் நீர்ச்சடைகளாய் விரிந்து வழிந்த அருவிகள்
மண்மகளின் பாதம் தொட்டன. கள்ளூறும் பூக்கள் உள்ளூறப் பார்க்க ஐந்தருவியில் நீராடினோம். மலைமுகடுகள் அடைகாக்க அரையாடையுடன் மேனி சிலிர்க்க,
பொதிகைத் தென்றலின் தீண்டலில் மெய்சிலிர்த்தோம்.
முடிவுரை WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்
மந்திசிந்து கனிகளுக்கு வான்கவிகள் கெஞ்சும்- குற்றாலக்குறவஞ்சி வரிகளை
நேரில் கண்டோம், பெருமகிழ்வுற்றோம். குளிரூட்டிகளும்
கூரைக்காற்றாடிகளும் என்றாகிவிட்ட நம் வாழ்வில் மனிதம்
துளிர்விடுவதே இப்படியொரு இயற்கைத் தீண்டலால்தான். மீண்டும் எப்போதோ ? மனம் ஏங்குகிறது.