உழைப்பே உயர்வு
முன்னுரை WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
மெய்வருத்தக் கூலி தரும் என்கிறார் வள்ளுவர். நாம் கண் உறங்கிய பின்னும் இதயம் உள்ளிட்ட உறுப்புகள்
உழைக்கின்றன. மரங்களின் வளர்ச்சிக்கு வேர்கள் நீர் தேடுகின்றன. நம்மைச் சுமக்கும்
பூமிப்பந்து சுழன்றும் சுற்றியும் வருகிறது. உழைப்பு உண்மையானால் உயர்வு தானே வருகிறது.
நிறையுழைப்புத்
தோள்கள் WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
விலங்கொடு விலங்காய்த் திரிந்தனர் நம்
முன்னோர். இன்றோ நாம் விண்ணையும் மண்ணையும் அளக்கிறோம். கோடிக்கணக்கான மனிதர்களின்
உழைப்பே இன்றைய நாகரிக உலகம்.
சிற்றூரும் வரப்பெடுத்த வயலும் ஆறு
தேக்கியநல் வாய்க்காலும் வகைப் படுத்தி
நெற்சேர உழுதுழுது பயன்வி ளைக்கும்
நிறையுழைப்புத் தோள்களெலாம் எவரின் தோள்கள் – பாரதிதாசன்.
உழைப்பாளர் நாள்
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
1923 ஆம்
ஆண்டு மே மாதம்
சிங்காரவேலர் தலைமையில் சென்னை
மெரினா கடற்கரையில் நடந்த கூட்டமே இந்தியாவின் முதல்
மே தினம். இந்த நிகழ்வின் நினைவாக முதல்வர்
காமராசர் முயற்சியால் எழுப்பப்பட்டதே இன்று நாம்
காணும் உழைப்பாளர் சிலை.
உழைப்பால்
உயர்ந்தவர்கள் WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
வாழ்க்கைப்பயணத்தில் நாம் சாதனைச் சிகரத்தை
அடைய நமக்கு வேண்டிய மூலதனம் உழைப்பு. தன் 20 ஆண்டுக் கண்டுபிடிப்புகளை அவரது
அன்பு நாய் நெருப்புக்கு இரையாக்கிய போது வருந்தவில்லை ஐசக் நியூட்டன். வழக்கறிஞரான தி.வே.சுந்தரம் அவர்கள்
மதுரையில் போக்குவரத்துக் கழகம் தொடங்கி டிவிஎஸ் என்ற குழுமத்தை உண்டாக்கினார். செருப்புத் தைக்கும்
தொழிலாளியின் மகனான ஆபிரகாம் லிங்கன் அமெரிக்க அதிபரானார்.
முடிவுரை WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
தேனீக்களின் தேனடை, எறும்புப் புற்று,
தூக்கணாங்குருவிக் கூடு இவை
அனைத்தும் மனிதனுக்கு இயற்கை சொல்லும் பாடம். உழைப்பு உயர்வு தரும் என்பதை அணு
விஞ்ஞானி அப்துல் கலாம் வாழ்ந்து காட்டினார். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
சோம்பிக் கிடந்தால் சிலந்தியும் உன்னைச் சிறை
பிடிக்கும்,
எழுந்து நடந்தால் இமயமும் உனக்குக்
குடைபிடிக்கும். உழைப்போம்! உயர்வோம்!