என்னைக் கவர்ந்த நூல்
முன்னுரை WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
தொட்டனைத் தூறும் மணற்கேணி மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு என்றார் திருவள்ளுவர். நூலகமில்லா
ஊருக்கு அறிவு பாழ் என்பது பழமொழி. என்னைச்
செதுக்கிக் கொண்டிருக்கும் நூல்கள் எங்கள் ஊர்ப் பொது நூலக நூல்களே. ஆம்,
அங்குதான் பாரதியைப் படித்தேன். அவரின் தாசன் பாரதிதாசனையும் படித்தேன். என்னைக்
கவர்ந்து விட்ட பாரதிதாசன் கவிதைகள் பற்றி இங்கு விவரிக்கிறேன்.
தமிழ்க் காதல் WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
தமிழுக்கும் அமுதென்று பேர்! - அந்தத்
தமிழின்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - என்று பாடியுள்ளார் பாரதிதாசன். தமிழை என்னுயிர் என்பேன் கண்டீர் என்று சொல்வதற்குத்தான் எவ்வளவு தமிழ்ப்பற்று அவருக்கு.
அதே நேரத்தில் எங்கள் தமிழ் உயர்வென்று நாம் சொல்லிச்
சொல்லித் தலைமுறைகள் பல கழித்தோம் குறைகளைந்தோமில்லை என்று சாடுகிறார்.
இயற்கை இன்பம் WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
நம் மனதைக் கொள்ளை கொள்ளும் வரிகள் பாரதிதாசனுடையவை.
ஆம், வானத்து நிலவை
நீலவான் ஆடைக்குள் உடல் மறைத்தே
நிலாவென்று காட்டுகிறாய்
ஒளிமுகத்தை என்று கூறும் போது
எனக்குள் கற்பனை ஊற்றெடுக்கிறது. குலுக்கென்று சிரித்த முல்லை மலர்க்கொடி கண்டேன் மகிழ்ச்சி
கொண்டேனே எனும் போது எனக்கும் துள்ளிக் குதிக்கத்
தோன்றுகிறது.
பெண் விடுதலை WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
பெண்ணடிமை தீருமட்டும் பேசும் திருநாட்டு
மண்ணடிமை தீர்ந்து வருதல் முயற்கொம்பே - என்று பெண்விடுதலை பாடியுள்ளார்.
கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே - இங்கு
வேரிற் பழுத்த பலா - என்று கைம்பெண் நிலையைப் பாடியுள்ளார்.
முடிவுரை WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
உழைப்பாளர் உரிமை கூறும் பாரதிதாசனின்
வரிகளில் புரட்சிக் கனல் தெறிக்கும், பொதுவுடைமை மேலோங்கும். அதே நேரத்தில்...
புதியதோர் உலகம் செய்வோம் - கெட்ட WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் - என்று கூறி வன்முறை மறுக்கிறார் பாரதிதாசன். படித்தேன்; முடித்தேன்; கவிதைகள்
அத்தனையும் தேன்.