சாலைவிதிகளை
மதிப்போம்
முன்னுரை
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
இனியொரு விதி
செய்வோம் – அதை
எந்த நாளும்
காப்போம் – என்றார் பாரதி. மனிதன் ஓரிடத்திலிருந்து மற்றோரிடம் செல்வதற்கு நீர், நிலம்,
வான் வழிகளைப் பயன்படுத்துகிறான். இவற்றுள் வான்வழி விரைவானதாக இருந்தாலும் செலவு
அதிகமாகும். கடல் வழியோ நேரமும் பொருளும் விரயமாகும். அது பொருள்கள் அதிக அளவில்
கண்டம் விட்டுக் கண்டம் எடுத்துச் செல்ல மட்டுமே சிறந்தது. நில வழிப்
போக்குவரத்தில் இருப்புப்பாதைகளும் சாலைகளும் உள்ளன. எண்ணற்ற மக்களை ஒவ்வொரு
நாளும் இணைக்கும் பாலமாக இருப்பவை சாலைகளே. சாலைகளில் விபத்தின்றிப் பயணம் செய்வது
குறித்து இக்கட்டுரையில் காண்போம்.
சாலைப்பாதுகாப்பு உயிர்ப்பாதுகாப்பு WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
இந்தியாவில்
1951 கணக்குப்படி
3
இலட்சம் கி.மீ. நீள சாலைகள் இருந்தன. அன்று 0.3 மில்லியன் வண்டிகள்
ஓடின. ஆனால் 2016இல் 56 இலட்சம் கி.மீ.
சாலைகளாகிவிட்டன. இதில் 230 மில்லியன் வண்டிகள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. இரு
சக்கர வண்டிகள், மகிழுந்து, சரக்குந்து, பேருந்து, சிற்றுந்து எனப் பலவகை வண்டிகள்
புற்றீசல்களாய் நான்கு வழி, ஆறு வழிச்சாலைகளில் நாள்தோறும் மொய்த்தபடி செல்கின்றன.
2017
கணக்குப்படி இந்தியாவில் 4,64,910 விபத்துகளில் 1,47,913 நபர்கள்
இறந்துள்ளனர். தமிழகத்தில் 65,562 விபத்துகளும் 16,157 மரணங்களும்.
மனித உயிர்கள் மகத்தானவை, அவை வீணே போக இடமளிக்கலாமா?
சாலைவிதிகள் WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
இந்தியாவில்
01-07-1989இல்
ஓட்டும் முறை ஒழுங்குபடுத்து விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. உரிய இடங்களில் பாதசாரிகள் சாலைகளைக்
கடக்க வேண்டும். நடைமேடைகளில் வண்டி ஓட்டக்கூடாது. சாலையின் இடப்புறமே வண்டி
ஓட்டவேண்டும். வளைவுகளில் முந்திச் செல்லக்கூடாது. அதிரொலியை நகர
எல்லைக்குள் ஒலிக்கக்கூடாது. தானியங்கி விளக்குகளின் ஒளிர்வுக்கு ஏற்ப வண்டி ஓட்டிச் செல்ல
வேண்டும். மிதவேகம் மிக நன்று, படியில் பயணம் நொடியில் மரணம். சாலைகளில்
விளையாடக்கூடாது. இரு சக்கர வாகனம் இருவர்க்கு மட்டுமே. சாலையில் ஆங்காங்கே
வைக்கப்பட்டுள்ள சமிக்ஞைப் பலகைகள் அறிந்து வண்டி ஓட்ட வேண்டும்.
ஊர்தி ஓட்டுநருக்கான நெறிகள்
ஊர்தி
ஓட்டுபவர்கள் பின்வரும் 6 குற்றங்களைச் செய்தால் கடும் தண்டனைக்கு உள்ளாவார்கள். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
Ø சிவப்பு
விளக்கு ஒளிரவிடாமல் செல்லுதல்
Ø அதிக பாரம்
ஏற்றிச் செல்லுதல்
Ø சரக்கு
வண்டியில் நபர்களை ஏற்றிச் செல்லுதல்
Ø அதிவேகப்
பயணம்
Ø மது, போதைப்
பொருள் உபயோகித்தல்
Ø அலைபேசியைப்
பயன்படுத்திக் கொண்டே ஓட்டுதல்.
இவ்விதிகளை மீறும் ஓட்டுநர்களின் உரிமம்
பறிமுதல் செய்யப்படும். 2018இல் மட்டும் தமிழகத்தில் 3,35,152 ஓட்டுநர்
உரிமங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதன் விளைவாக விபத்தில் உயிரிழப்பு 25%
குறைந்துள்ளது.
விபத்துகளைத் தவிர்ப்போம் விழிப்புணர்வு
தருவோம்
இந்திய
அளவில் சாலைவிபத்து,
உயிரிழப்பு இவற்றில் தமிழகம் இரண்டாம் இடத்தில் இருப்பது
வெட்கக்கேடானது. WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
தலைக்கவசம்
உயிர்க்கவசம், இருக்கைப் பட்டை நம் உயிரின் இருப்பு அட்டை என்பதை நாம்
ஒவ்வொருவரும் உணரவேண்டும். ஒரு வழிப்பாதையில் அனுமதிக்கப்பட்ட திசையில் மட்டுமே
செல்ல வேண்டும். விவசாயத்திற்குப் பயன்படும் உழவூர்திகளில் மக்களை
ஏற்றிச் செல்லக்கூடாது. தீயணைப்பு, மருத்துவ அவசர ஊர்திகளுக்கு வழிவிட வேண்டும். சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்குகள்
முறையே நில், தயாராகு, புறப்படு என்பதைக்
குறிக்கும். நிறுத்து கோட்டுக்கு முன் வண்டியை நிறுத்த வேண்டும்.
முடிவுரை WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
எட்டுத்திக்கும்
சென்றிடுவீர்
கலைச்செல்வங்கள்
யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் – என்றார் மகாகவி பாரதி. ஒப்பற்ற செல்வமான உயிரை வீடு கொண்டு
சேர்ப்பதே நம் முதல் கடமை. குருதிக்கொடை மருத்துவமனைகளில் மட்டுமே நடக்க வேண்டும்,
நட்ட நடுச் சாலைகளில் அல்ல. 100இல் (வேகம்) சென்றால் 108இல் செல்ல வேண்டியதிருக்கும். சாலை விதிகளை
மதிப்போம், விபத்தில்லாப் பயணம் செய்வோம்.
WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM - தமிழ்த்துகள்