கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, May 24, 2021

சந்தை தமிழ்க் கட்டுரை SANTHAI TAMIL KATTURAI

 

சந்தை

முன்னுரை                                        WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

சந்தைக்குப் பொருள் கொண்டு போவதும் பொருள் வாங்கி வருவதுமான மகிழ்ச்சி பெருநகரங்களில் தொலைந்துவிட்டது. இருப்பினும், இன்றும் சில இடங்களில் சந்தை மரபு இருந்து கொண்டுதான் இருக்கிறது. பல்பொருள் அங்காடிகளின் வருகை வணிகருக்கும் மக்களுக்குமான உறவைக் குறைத்து வருகிறது. சந்தையில் வணிகம் மட்டுமல்லாமல் வாங்குபவரின் மனநிலையும் பேணப்பட்டது. தலைமுறை தலைமுறையாகப் பொருள்களை விற்பவர்-வாங்குபவர் உறவு வளர்த்த சந்தை வணிகம் அறியப்பட வேண்டிய ஒன்று.

அங்காடிகளும் பண்டமாற்றும்       WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

பூஞ்சோலை கிராமத்திலிருந்து புதுச்சேரியில் உள்ள தம் மகள் வீட்டிற்கு வந்த தணிகாசலம் தன் பெயரன் மூர்த்தியுடனும் பெயர்த்தி கீர்த்தனாவுடனும் உரையாடும்போது சந்தை பற்றியும் அங்காடிகள் பற்றியும் கூறுகிறார்.

பகலில் செயல்படும் கடைகளை நாளங்காடி என்றும் இரவில் செயல்படும் கடைகளை அல்லங்காடி என்றும் கூறுவர். ஒன்றைக் கொடுத்து இன்னொன்று வாங்குவதே பண்டமாற்று முறை. இது காசு பணம் இல்லாமல் செய்யும் சிறு வணிகமுறை ஆகும்.

சந்தை வளர்ந்த கதை                    WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

நாடோடி வாழ்க்கைக்குப் பின் மனிதன் நால்வகை நிலங்களில் வாழ்ந்தான். மக்களின் தேவை, பயன்பாடு, உற்பத்தி ஆகியவை பெருகின. காய்கறி, கீரை, தானியம் இவற்றை விற்கவும் மாற்றுப் பொருள்களை வாங்கவும் முச்சந்தி, நாற்சந்தி என்று மக்கள் கூடும் இடங்களில் விரித்த கடையே சந்தை ஆனது. சிறுவணிகச் செயல்பாட்டுக்கான உள்ளூர்ச் சந்தை கிராமச்சந்தை. கடுகு, சீரகம் உள்ளிட்ட உணவுத் தானியங்கள், காய்கறிகள், கோழி, ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள், சோப்பு, சீப்பு, கண்ணாடி வளையல்கள் போன்ற அலங்காரப் பொருள்கள், இரும்புப் பாத்திரங்கள், துணிமணிகள் மற்றும் தொழிலுக்குத் தேவையான அத்தனை பொருள்களும் கிடைக்கும் இடமாக சந்தை வளர்ந்தது.

புகழ்பெற்ற சந்தைகள்                           WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சந்தை 18 ஏக்கர் பரப்பளவில் 8000 கடைகளுடன் இன்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கூடுகிறது. 125 ஆண்டுகள் வயதான அச்சந்தையில் நான்கு தலைமுறை நட்பு நிலவுகிறது. மணப்பாறை மாடு, அய்யலூர் ஆடு, ஒட்டன்சத்திரம் காய்கறி, நாகர்கோவில் தோவாளை பூ, ஈரோடு ஜவுளி, கடலூர் காராமணிக்குப்பம் கருவாடு, நாகப்பட்டினம் மீன் சந்தைகள் தமிழகத்தில் புகழ்பெற்ற சந்தைகள் ஆகும்.

மால்களில் வியாபாரம்            WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

குண்டூசி முதல் கணினி வரை எல்லாப் பொருள்களும் ஒரே இடத்தில் கிடைக்கும் கடைகளைக் கொண்டவைதான் இன்றைய மால்கள். ஒரே கட்டடத்தில் கடைகள், திரைப்பட அரங்கு, உணவகம், கேளிக்கை அரங்குகள் இருக்கும். மேலாண்மை, கண்காணிப்பு, கட்டமைப்பு வசதி, தொடர் பராமரிப்பு என்று பெரிய அளவில் முதலீடு இதற்குத் தேவை.

முடிவுரை                                 WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM

கலப்படம் இல்லாத நேர்மைதான் கிராமச் சந்தையோட அடிப்படை. மக்கள் நாகரிகம் குறிஞ்சி நிலத்தில் வேரூன்றி, முல்லை நிலத்தில் வளர்ந்து, மருதத்தில் முழுமையும் வளமையும் அடைந்தது. கழைக்கூத்து, பொம்மலாட்டம் என திருவிழாவுக்குச் சென்று வரும் மன நிறைவை சந்தைகள் ஏற்படுத்துகின்றன.

தானியங்கிப் படிக்கட்டுகளில் ஏறி குளிரூட்டப்பட்ட அறையில் கெடுநாள் குறிக்கப்பட்ட பொட்டலங்களை வாங்கி வருவதில் வணிகம் உண்டு, மனிதம் இல்லை, என்று மரபு வழி வேளாண்மை செய்யும் தன் தாத்தா சொல்லச்சொல்ல, அந்தக்காலத்துச் சந்தையில் மக்கள் பணத்தை விட மனித மாண்புகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார்கள் என்பதை மூர்த்தியும் கீர்த்தனாவும் பெருமையுடன் நினைத்தார்கள்.

WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM                                  - தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive