.
சங்க இலக்கியங்களில் அறம்
முன்னுரை WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
ஈயென இரத்தல் இழிந்தன்று அதன்எதிர்
ஈயேனென்றல் அதனினும் இழிந்தன்று – என்கிறார் கழைதின் யானையார். இருப்போரின் வாழ்வு இல்லாதோர்க்கு ஈவதாலேயே சிறக்கும்.
அறமும் மறமும் போற்றி வளர்த்த மரபில் வந்தவர்கள் தமிழர்கள். எளிய உயிர்கள்பால்
இரக்கம் கொள்வதே உயர்ந்த மனிதப்பண்பு. அதனால்தான் ஔவையார் தம் ஆத்திசூடியில் முதல் வரியாக
அறம் செய விரும்பு என்றார். அறமும் மனித வாழ்வும் குறித்து இக்கட்டுரையில்
காண்போம். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
மனித வாழ்வு அறம் சார்ந்தது
நம் முன்னோர் மனித வாழ்வை அகம், புறம் என இருவகையாற் பிரித்தனர். புறம்
முழுவதும் போர், புகழ், கொடை, வீரம் பாடியது. அகம் முழுவதும் மனத்தான்
நிகழ்வது என்பது நாம் அறிந்ததே.
அறனெனப் பட்டதே இல்வாழ்க்கை அஃதும்
பிறன்பழிப்ப
தில்லாயின் நன்று – என்கிறார் வள்ளுவர். இல்வாழ்வின் பொருளே அறம் என
வலியுறுத்துவதிலிருந்தே மனித வாழ்வோடு அறம் எவ்வாறு பின்னிப்பிணைந்துள்ளது எனத்
தெரிகிறது. மேலும்
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும்
அது – என்று கூறி இக்கருத்துக்கு வலுச்
சேர்த்திருக்கிறார் வள்ளுவர். WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
இலக்கியம் காட்டும் அறம்
தமிழரின்
தாய்ப்பாலாய் விளங்கும் முப்பால் அறம், பொருள், இன்பம் பற்றிப் பாடப்பட்டது. அறநூல்கள் மனிதனை நல்வழிப்படுத்தவே
எழுதப்பட்டன. கொடையும்
.
தயையும்
பிறவிக்குணம் என்கிறார் ஔவையார்.
அவருக்கு நெல்லிக்கனி ஈந்த அதியனோடு சேர்த்து ஏழு வள்ளல்கள் பாரி, ஓரி, காரி, ஆய், நள்ளி, பேகன் என நாம் அறிவோம். இரந்து வந்த
புலவனுக்குத் தன் தலையையே கொடுக்க வந்த குமண வள்ளலைப் புறநானூறு போற்றுகிறது. ஈன்று புறந்தருதல் என்தலைக்கடனே என்ற புறநானூற்றுப் பாடலில் ஒவ்வொருவரும் அவரவர்தம்
கடமைகளைச் சரிவரச் செய்வதே அறம் என்கிறார் புலவர் பொன்முடியார். பரிசில் பெற வந்த புலவர்
ஒருவற்கு அரசரின் மகன் தாம் உருட்டி விளையாடும் நடைவண்டியைப் பரிசாய்க்
கொடுத்தானாம். இதை நடை கற்குமுன் கொடை கற்றாயே என்று அவர் மெய்சிலிர்த்துப்
போற்றுகிறார்.
அறத்தான் வருவதே இன்பம் WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா
இயன்றது அறம் – என்று பொய்யாமொழிப்புலவர் உரைக்கிறார்.
இன்றைய புதுமைக்கவிஞர் பாரதியோ அன்னசத்திரம் ஆயிரம் வைத்தல் எனத்தொடங்கி ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்
என்பதே தலையாய அறமென்கிறார்.
செல்லுயிர் கொடுத்தேனும் செங்கோலை வளையாது
நிமிர்த்துவது
அரசியல் அறமாகும் என வலியுறுத்துகிறது மணிமேகலை. கருணை கூர்ந்து யாவர்க்கும்
வேண்டுவன ஈதலே இன்பம் என்று இளையான்குடி மாறநாயனார் வாழ்ந்து காட்டினார்.
முடிவுரை WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
மனம், புத்தி,
சித்தம் ஆகிய அகநிலை உறுப்புகளை அன்பில் தோயச்
செய்து யார்மாட்டும் அன்புடையராய் வாழ்வதே அறம் ஆகும். வாழும் உயிர்க்கு அறத்தை
விட நன்மையாவது ஏதுமில்லை என்கிறது குறள். ஆம்,
சிறப்புஈனும் செல்வமும் ஈனும்
அறத்தினூஉங்கு
ஆக்கம் எவனோ
உயிர்க்கு. WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
அதனால்தான்
இல்லறம் துறவறம் என இருவேறு வாழ்க்கைமுறையிலும் அறம் விடாது பற்றிக்கிடக்கிறது.
ஆதலால் அறம் செய விரும்பு.