*
உண்மை ஒளி
முன்னுரை
ஜென் என்னும்
ஜப்பானிய மொழிச் சொல்லுக்குத் தியானம் செய் என்பது
பொருள். புத்தமதத் துறவியரில் ஒரு பிரிவினரே ஜென் சிந்தனையாளர்கள்.
உண்மை ஒளி WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
பசி, தாகம், தூக்கம் எல்லா
உயிர்களுக்கும் பொதுவானது. இரவும் பகலும் மாறி மாறி வருவது
போல வாழ்வில் இன்பமும் துன்பமும் மாறி மாறி வரும் என்றார் துறவி. உண்மை ஒளி என்பது தொலைவில் உள்ள மரம், விலங்கு இவற்றைப்
பார்க்கும்போது வருவது அல்ல. ஒரு மனிதரைக் காணும்போது இவர் என்
உடன் பிறந்தவர் என்று எப்போது உணர்கிறோமோ
அப்போதுதான் உண்மையான ஒளி நமக்குள் ஏற்படுகிறது என்றார்.
தன்னலத்துக்காக கோட்பாட்டை அழிக்காதே
அருகிலுள்ள சிற்றூருக்குத் தன் குதிரையில் செல்கிறார் துறவி. இருட்டும் நேரம், மயக்கத்தில் கிடப்பதுபோல் நடித்து, குரு கொடுத்த
தண்ணீரைக் குடித்துவிட்டு, குதிரையைக் களவாடிச் செல்கிறான்
ஒருவன். மறுநாள் அவனைச் சந்தையில்
சந்திக்கிறார் குரு. குதிரையை நீயே வைத்துக்கொள், ஏனென்றால் இரக்கத்தைப் பயன்படுத்தி நீ திருடிவிட்டாய். இரக்கப்பட்டவர் ஏமாந்து விடுவர் என்று தவறாக இவ்வுலகம் பேசும் என்றார்.
முடிவுரை WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM
குருவின் பெருந்தன்மையை அறிந்த அவன் வெட்கித் தலைகுனிந்தான். நம்மால் இயன்ற உதவியைச் செய்வோம். அதுவே மனிதப் பண்பு. அதனால் இழப்பு ஏற்பட்டாலும் கவலைப்படக் கூடாது.