கட்டுரைகள், கடிதங்கள், இயங்கலைத் தேர்வுகள், இலக்கண விளக்கங்கள், கற்றல் வளங்கள், கையேடுகள், மனவரைபடங்கள், மாதிரி வினாத்தாள்கள், தமிழ் சார்ந்த எண்ணற்ற பதிவுகளுக்கு தமிழ்த்துகள் வலைதளம். தங்களின் மேலான கருத்துகளுக்கு - செ.பாலமுருகன், அருப்புக்கோட்டை. திறன்பேசி எண் - 9865447641

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

Monday, May 24, 2021

இருப்பிடச் சான்று வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பம் NATIVITY CERTIFICATE FORM

 

.

இருப்பிடச் சான்று வேண்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பம்

அனுப்புநர்

மு.முத்துமுருகன்,

/பெ.ச.முனியாண்டி,                  

25, வடக்குத்தெரு,

கல்லூரணி, 626105

அருப்புக்கோட்டை வட்டம்,

விருதுநகர் மாவட்டம்.

பெறுநர்

வட்டாட்சியர் அவர்கள்,

வட்டாட்சியர் அலுவலகம்,

அருப்புக்கோட்டை, 626101

விருதுநகர் மாவட்டம்.                

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள் - இருப்பிடச் சான்று வேண்டுதல் சார்பாக ...

வணக்கம் நான் மேற்கண்ட முகவரியில் வசித்து வருகிறேன். என்னுடைய மேல்படிப்பிற்காகவும் கல்வி உதவித்தொகை பெறுவதற்காகவும் இருப்பிடச் சான்று தேவைப்படுகிறது.                          

உரிய படிவங்களை நிரப்பி கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரின் பரிந்துரைகளுடன் தங்களிடம் இவ்விண்ணப்பத்தை இணைத்து அனுப்பியுள்ளேன். தாங்கள் அருள்கூர்ந்து எனக்கு இருப்பிடச் சான்று வழங்க ஆவ செய்யுமாறு மிகவும் பணிவுடன் வேண்டுகிறேன்.

நன்றி

நாள் – 20-11-2020                                                 தங்கள் உண்மையுள்ள

இடம் – அருப்புக்கோட்டை.                                          மு.முத்துமுருகன்.

இணைப்பு

1.உரிய படிவங்கள்,                               

2.ஆதார் அட்டை நகல்,

3.குடும்ப அட்டை நகல்,

4.பள்ளி அடையாள அட்டை.

உறைமேலிட்ட முகவரி             

பெறுநர்

வட்டாட்சியர் அவர்கள்,

வட்டாட்சியர் அலுவலகம்,

அருப்புக்கோட்டை, 626101

விருதுநகர் மாவட்டம்.

WWW.TAMILTHUGAL.BLOGSPOT.COM                                     - தமிழ்த்துகள்

தமிழ்த்துகள்

Blog Archive